அராலி தெற்கில் வயோதிப பெண் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் அராலி தெற்கு பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியாத நிலையில், அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, குறித்த பெண் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்திருந்தார்

சம்பவ இடத்தில் இரண்டுமண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டுள்ளன அதில் ஒன்று முழுமையாக காலியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வீட்டின் உள்ளே மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு பின்னர் அறுக்கப்பட்டும் இருந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவிடனர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment