அரச பணியாளர்களை நட்டஈடு கொடுத்து பணி நீக்கத் திட்டம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் அரச பணியாளர்களை நட்ட ஈடு கொடுத்து பணி நீக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் இயந்திரங்கள் நிறுவனத்தை ஒன்றிணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், அந்தந்த நிறுவனங்களில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் வைத்திருக்கவும், ஏனையோரை பணி நீக்கவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளன.

இதற்காக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share this Article