அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவில் பெரும் வீழ்ச்சி!- ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் முடிவுகளின்படி அரசாங்கம் சுமார் 10 வீத வாக்கு வீதத்தையும், இறுதித் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளும் சுமார் 8 வீதமான சிறிய வாக்கு வீதத்தைப் பெறும் எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று (மார்ச் 6) தெரிவித்தார்.

அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டிய உயர் நீதிமன்றத்துக்கு நன்றி கூறிய ஜி. எல்.பீரிஸ் அரசாங்கம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தேர்தலைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் தேர்தலுக்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்கியமை தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த பலமான ஆதரவு என்றும், வேட்பு மனு தாக்கல் செய்த 3 ஆயிரத்து 500 அரச பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரபட்சத்தில் தேர்தல் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share this Article