அம்மா பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனடா தேசத்தில் இயங்கும் நெடுந்தீவு மாவிலி செல்வனின் கே.கே.சகோ இசைக்குழுவினால் இன்றைய தினம் (ஜீலை 01) அம்மாக்களுக்ககான உயரிய கௌரவம் வழங்கி அம்மா பாடல் வெளீயீடு செய்யப்பட்டுள்ளது.

கே.கே.சகோ இசைக்குழுவின் K.K.BRO YouTube Chanel ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவினை முன்னிட்டு இசைக்குழுவின் சிறப்பு வெளியீடாக இவ் அம்மா பாடல் வெளியீடு செய்யப்பட்;டுள்ளது.

ஆர்.கே.கண்ணன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில் இன்னிசை வித்தகன் சுதர்சன் அவர்களின் இனிய இசையில் நெடுந்தீவு மாவிலி செல்வன் அவர்களின் குரலில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இவர்களால் தந்தையர் தினத்தினை முன்னிட்டு அப்பா பாடல் வெளியீடு செய்யப்பட்டதுடன் பல பக்தி பாடல்களும் வெளியீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் வாழ்ந்தமையால் அதனை மறவாமல் நெடுந்தீவு மாவிலி செல்வன் எனும் பெயருடன் வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நெழுவினி நாயகனே எனும் இசைத்தட்டு வெளியீடு நெடுந்தீவில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Article