அனலைதீவு பாலமுருகன் முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தையும் கண்காட்சியும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அனலைதீவு பாலமுருகன் முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தையும் கண்காட்சி நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முன்பள்ளி மாணவர்களின் செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை இன்று(ஜூலை 19) முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

முன்பள்ளி மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுணுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக மாதிரி சந்தை நிகழ்வு நடத்தப்படுகின்றது.

மாதிரிச்சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டக் காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தினர்.

முன்பள்ளி மாணவர்களின் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆதரவை வழங்கி வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்.

Share this Article