சதாசிவ மகா வித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி மாவட்டமட்ட போட்டிக்கு தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் பெண்கள் துடுப்பாட்ட அணி நேற்றுமுன்தினம்(ஜூன் 19) ஊர்காவற்துறை புனித அந்தோணியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற வலய மட்ட எல்லே போட்டியில் வெற்றி பெற்று மாவட்டமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டியில் முதலாவதாக, தம்பாட்டி பாடசாலையை எதிர்கொண்டு 25 பந்துகளில் 9:0 என்ற ஓட்ட விகிதத்தில் வெற்றி பெற்றனர்.

இறுதி ஆட்டத்தில், 30 பந்துகள் நிறைவில் 4 ஓட்டங்களை பெற்றிருந்த புங்குடுதீவு மகா வித்தியாலய அணியுடன் போட்டியிட்டு 15 பந்துகள் நிறைவில் 5 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக்கொண்டனர்.

அணியினர் வலய மட்டத்தில் எட்டாவது தடவையாக வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article