அனலைதீவுக்கு கற்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் ஒருவர் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் பகுதியளவில் மூழ்கியதில் படகில் பணிபுரிந்தவரொருவர் காயமடைந்த சம்பவம் நேற்று(ஓகஸ்ட் 6) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து மேற்படி படகு அனலைதீவுக்கு சென்று கொண்டிருந்த போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் படகினை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Share this Article