அனலைதீவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மருத்துவ சேவை முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு வைத்தியசாலையில் இன்று (மார்ச் 18) காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ சேவை முகாம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கண்நோய் மற்றும் பார்வை தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் சென்று பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின்பு குறைபாடு உள்ளவர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண்வில்லை பொருத்துவதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என ஊர்காவற்துறை
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article