அதிகரிக்கும் போலி நாணயங்கள் – பெருந்தொகையில் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

திருகோணாமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் போலி நாணயத்தாளை பயன்படுத்திப் பொருட்கள் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் போது பொலிஸாருக்குத் கிடைத்த இரகசிய தகவலை ஒருவர் கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் கிண்ணியா உதவிப் பொலிஸ் அதிகாரி ராஜித குருசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற விசாரனைகளை அடுத்து போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட அச்சகத்தை சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்

இருவரும் சேர்ந்து ஒரு லட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Share this Article