அடுத்தவாரம் தமிழ்க் கட்சிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரம் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்புக்கு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைக்கப்படவுள்ளனர்.

அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று அல்லது நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

11 ஆம் திகதி பொதுப் பிரச்சினைகள் தொடர்பாகவும், 12 ஆம் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும், 13 ஆம் திகதி அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்படும் என்று அறியமுடிகின்றது.

இந்தச் சந்திப்புக்கள் முதல் இரு நாள்களும் மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் என்றும், இறுதி நாள் மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் என்றும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

Share this Article