அக்கா தங்கை குளத்துக்கான பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையினர் “அக்கா தங்கை குளத்துக்கான “பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பில் அண்மையில் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

ஊர்காவற்றுறை சுருவில் பிரதான வீதியின் ஓரமாக உள்ள இந்தக் குளத்துக்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமையால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்பாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி இந்த எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக இன்றயதினம் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரதேசசபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து களப்பார்வையில் ஈடுபட்டனர்.

Share this Article