வேலணை மத்திய கல்லூரியின் சிறுவர் தின நிகழ்வு 02ஆம் திகதி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியின் சிறுவர் தின நிகழ்வுகள் எதிர்வரும் 02ஆம் திகதி கல்லூரியின் சேர்.வை.துரைசாமி ஞாபகார்த்த மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

“எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” என்ற தொனிப்பொருளில் ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

கல்லூரியின் அதிபர் வி.இ.ஹஸ்ரவ் றோய் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் விருந்தினர்களாக தீவகம் தெற்குப் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி கிருஷாந்தினி நாகராஜாவும், ஊர்காவற்றுறைப் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிவராஜ் யுவராஜாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article