‘வேர்கள் வான் நோக்கின்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வட்டக்கச்சி வினோத்தின் ‘வேர்கள் வான் நோக்கின்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 29) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டு வைத்தார்.

மேலும், கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முதல்வர் பூலோகராஜா, பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் விலகல் தொடர்பில் குறிப்பிட்டார்.

Share this Article