விவசாய உற்பத்திக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமுர்த்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் இன்றைய தினம் ஜேஃ02 கிராம அலுவலர் பிரிவில் இரண்டு லட்சம் மனைப் பொருளாதார அலகுகளைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

விவசாய உற்பத்தியினை மேம்படுத்தும் நோக்குடன் தோட்ட மண் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

 

சமுர்ததி முகாமையாளர் திருமதி கோ.பாமினி அவர்களது தலமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர், பொதுஜன பெரமுன கட்சியின் தீவக இணைப்பாளர் மற்றும் கட்சியின் நெடுந்தீவு இணைப்பாளர் வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article