விவசாய உபகரண திருத்த பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உலக உணவுத்திட்டத்தின் கீழ் விவசாய உபகரண திருத்த பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு என்விகியூ 3 சான்றிதழும், அவர்களுக்கான திருத்த உபகரணத் தொகுதிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கடந்த 31ஆம் திகதி துணுக்காய் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க. விமலநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உபகரண தொகுதி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உலக உணவுத்திட்ட மாவட்ட முகாமைத்துவ பொறுப்பதிகாரி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உலக உணவுத்திட்ட இணைப்பு உத்தியோகத்தர், அபிவிருத்தி அலுவலர்கள் மற்றும் பயனாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article