விலைகளை அதிரடியாகக் குறைத்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது நேற்று(ஜூலை 4) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 3 ஆயிரத்து 186 ரூபாவிலிருந்து 2 ஆயிரம் 982 ரூபாவாக குறைவடையும்.

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை ஆயிரத்து 198 ரூபா ஆகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை 561 ரூபா ஆகும்.

Share this Article