விபத்தில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன்! – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் – கொழும்பு வீதியில் முந்தல், மங்கலேலிய பகுதியில் இன்று (ஜூன் 29) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹலவத்த பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாகன சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

Share this Article