விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி மாவட்டம் வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில் பிரதான வீதியின் வேரவில் வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்ரோபர் 15) இரவு 7:30 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஜெயாபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பூநகரி வலைப்பாட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிதம்பரநாதன் வர்மகுமார் (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Share this Article