விடுதியினுள் உயிரிழந்த நிலையில் வைத்தியரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

35 வயதுடைய குறித்த வைத்தியர் சேவைக்கு சமுகமளிக்காததால் சிற்றூழியர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.

அதன்போது, அவர் விடுதியினுள் உயிரிழந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றி வருவதாகவும், அத்துடன், அவரது மனைவி வேறு வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவல்துறை விசாரணைகள் இடம்பெறுகின்றன.

வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

Share this Article