வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமெந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (ஜூன் 6) காலை திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்றது.

கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், சொகுசு வாகனத்தில் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Share this Article