வாகனக் கண்ணாடிகள் திருடிய கும்பல் சிக்கியது – மோட்டார் சைக்கிள்களும் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
கொழும்பில் நீண்டகாலமாக  வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் 20 சோடியும் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்,
திருடப்பட்ட கண்ணாடிகளை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கல்கிசை  நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கொழும்பு நகரப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக  திருடி அந்த மோட்டார் சைக்கிள்களில்  வாகனங்களின் பக்க கண்ணாடிகளை உடைத்து திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Share this Article