வவுனியா நகரத்தில் வீதியோரம் ஆணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா நகரப் பகுதியில் வீதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (மே 15) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

வீதியோரம் ஒருவர் அசைவற்று காணப்படுகின்றார் என்று வவுனியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பொலிஸார் அவரைப் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டது.

அதையடுத்துப் பொலிஸார் சடலத்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

நகரப் பகுதியில் யாசகம் பெறுபவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article