வவுனியாவில் நடந்த தீ விபத்தில் உணவகத்துக்குச் சேதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா நகரில் உள்ளஉணவகம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு 8.25 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வவுனியா நகர சபைத் தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்குக் காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article