வளர்ப்பு நாயை மீட்கக் கிணற்றில் இறங்கிய இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிணற்றில் வீழ்ந்த வளர்ப்பு நாயை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 27) காலை கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விவகானந்தன் வேணிலவன் என்ற 24 இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கிணற்றில் வீழ்ந்துள்ளது. அந்த நாயை மீட்கபதற்கான இளைஞன் கயிற்றைப் பயன்படுத்தி கிணற்றில் இறங்கியுள்ளார்.

கிணற்றில் இருந்து இளைஞன் வெளியே வராத நிலையில், தந்தை அயலவர்களின் உதவியை நாடியுள்ளார். அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்ட நிலையில், இளைஞர் சடலமாகக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

Share this Article