வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன், வட மாகாண ஆளுநரை சந்தித்தார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன், இன்று செவ்வாய்க்கிழமை (மே 27) வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை (மே 20) ஜனாதிபதியின் செயலாளரால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், கைதடியிலுள்ள அலுவலகத்தில் இன்று (மே 27) காலை உத்தியோகபூர்வமாக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article