வடக்கில் வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனங்கள்!- ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் 350 பேருக்கு நியமனக் கடிதங்கள் தேசிய கல்வியற் கல்லூரியில் வைத்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸால் வழங்கப்படவுள்ளது.

மாகாணத்தில் வெற்றிடமுள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலதிக விவரங்களை வடக்கு மாகாண சபையின் இணையத்தளம் www.np.gov.lk., வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cdumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article