ரயில் விபத்தில் பாடசாலை அதிபர் உயிரிழப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாடசாலை அதிபர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 11) நடந்துள்ளது.

தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தைச் சேர்ந்த ரதெல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபரான கதிர்வேல் சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று பாடசாலையைச் சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுத்திரிகரிப்பு நடவடிக்கைகள் முடிந்ததும் அதிபர் வீடு திரும்பியபோதே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துத் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article