யாழ் பல்கழைக்கழக நிர்வாகத்தினருக்கும் யாழ் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையேயான கலந்துரையாடலின் பின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என பல்கழைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மெய்யழகன் பாலேந்திரா தெரிவித்தார்.
எதிர்வரும் புதன்கிழமை யாழ் பல்கழைக்கழக நிர்வாகத்தினருக்கும், மாணவர் ஒன்றிய நிர்வாகத்தினருக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. அதன் பின்னரே யாழ் பல்கழைக்கழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
வெளி மாவட்டத்தினை சேர்ந்த மாணவர்கள் புதன் கிழமை வெளியிடப்படும் அறிவுறுத்தலின் பிரகாரம் விடுதிகளுக்கு வருவது நன்று எனவும் திட்டமிட்டவாறு பரிட்சைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.