யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (டிசம்பா் 20) 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் மருதனார்மடம் கொத்தணி தொடர்பால் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பகுதியை சேர்ந்த 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது 2 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

Share this Article