யாழில் அதிகரிக்கும் புற்றுநோய், பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை உரிய வகையில் மேற்கொள்ளும் போது குறித்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு, ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும் எனவும் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Share this Article