மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!- மற்றுமொரு இளைஞர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம் பொக்கணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று(மே 9) அதிகாலை 3.00 மணியளவில் கண்டாவளைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதி விபத்துக்குள்ளானதில் புளியம்பொக்கணைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவத்தில் இரண்டு கால்நடைகள் இறந்துள்ளன.

விபத்து தொடர்பில் மேலக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article