மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் பெரும் போராட்டம்! – ஜோசப் ஸ்ராலின் அழைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மே மாதம் 01 ஆம் திகதி பெரும் போராட்டம் ஒன்றை மேற்க்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று(ஏப்ரல் 29) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மே தினக்கூட்டத்தின் பேரணியானது மதியம் 1.00 மணியளிவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. மேதினக் கூட்டத்தில் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளையே முன்வைக்கவுள்ளோம்.

ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்களின் ஆணையில்லாமலே செயற்படுகிறது. ரணில், ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுடன் செயற்படுகிறது. அவ்வாறு செயற்பட்டால் அவை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே தோற்றுவிக்கும்.

நாட்டில் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளியில் கொண்டு வருவதில் தொழிற்சங்கங்கள் முன்நின்று செயற்படுவதனாலேயே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கின்றது- என்றார்.

Share this Article