மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு, மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (ஜனவரி 17) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 200 நிலையங்களில் நடைபெறவுள்ளது. அதற்காக 3 இலட்சத்து 30 ஆயிரத்து 709 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

அவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 109 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகளாவர். பரீட்சை அனுமதி அட்டைகளில் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நாளைவரை இணையம் வழியான திருத்திக் கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், விரிவுரைகளை இணையத்தளத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

Share this Article