முல்லைத்தீவு மாவட்ட செயலராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அரச அதிபர் வெற்றிடத்துக்கு இலங்கை நிர்வாக சேவையின் அதிசிறப்பு தரத்தை சேர்ந்த திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனாவிடமிருந்து அரச அதிபர் நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

இவர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நாளை (ஜூலை 9) காலை 8.58 – 9 55 சுபவேளையில் பதவி ஏற்கவுள்ளார்.

இவர் ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும் இடைநிலை கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பயின்று வர்த்தக பிரிவில் அதி சிறப்பு சித்தி பெற்று உயர்கல்வியை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தில் தொடர்ந்து முதுநிலை கல்வியை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

Share this Article