முல்லைத்தீவுக் குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மதவளசிங்கன்குளம், முறிப்புக் குளம் என்பவற்றில் நன்னீர் மீன் குஞ்சுகள் இன்று (மார்ச் 14) விடப்பட்டன.

சுப்ரமணிய ஐயப்பா மற்றும் கனடா கியுபெக் அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் அனுசரணையுடன் இந்த செயற்றிட்டம் நடைபெற்றது.

மதவளசிங்கன் குளத்தில் 40 ஆயிரம் மீன்குஞ்சுகளும், முறிப்பு குளத்தில் 40 ஆயிரம் மீன்குஞ்சுகளும் விடப்பட்டன.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மீன்குஞ்சுகளைக் குளத்தில் விட்டார்.

Share this Article