முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (டிசம்பர் 31) முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்ததாகவும், இதன்போதே  கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த கணவன், குடும்ப முரண்பாட்டினால் குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ள நிலையில் மனைவியிடம் ஏற்பட்ட முன்கோபம் காரணமாக, மனைவி மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்றவேளை கத்தியால் தாக்கியுள்ளார்.

சமீபத்தில் கழுத்தில் கத்திக்குத்து இடம்பெற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் வருகை தந்து கணவனை கைது செய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share this Article