முன்னாள் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்சவுக்கு புதிய வீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முன்னாள் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்சவுக்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரெசன்டில் உள்ள வீடொன்றை வசிப்பதற்கு வழங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்ச முன்னர் வசித்த இல்லத்தையே அரசாங்கம் கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே தற்போது அவருக்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரசன்ட் வீட்டை வழங்கியுள்ளது.

மலலசேகர மாவத்தை சத்தம் மிகுந்ததாகக் காணப்படுவதால் அவர் புதிய இடத்தை கோரியிருந்தார்.

ஆயினும் அவரது பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. நூறுக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் அவரது பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது.

Share this Article