மீண்டும் பொறுப்பேற்ற மருத்துவர் சிவரூபன்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர் சிவரூபன் இன்று (பெப்ரவரி 15) தனது கடைமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையிலிருந்த போதே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இன்று பளை பிரதேச வைத்தியசாலையில் கடைமைகளைப் பொறுப்பேற்ற மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

Share this Article