மீண்டும் சேவைக்கு வருகின்றது வடதாரகை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மீண்டும் சேவைக்கு வருகின்றது வடதாரகை

நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை 2 படகு கடந்த சில காலங்களாக பழுதடைந்த நிலையில் மக்களது போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

தற்போது பல தடைகளுக்கு அப்பால் திருகோணமலை கடற்படையினரின் கப்பல் புனரமைப்பு பணித்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பான முறையில் திருத்தம் செய்யப்பட்டு வேலைகள் யாவும் முடிவுற்ற நிலையில் எதிர்வரும் 21ம் திகதி (மே – 21) நெடுந்தீவு நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்படும் இவ் வடாதாரனை 2 படககுச்சேவை ஜீன் மாதம் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article