மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சுனாமி பேரழிவின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பா் – 26) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றது

Share this Article