மாலைதீவில் குழந்தையை பிரசவித்து கொலை செய்த இலங்கைப் பெண் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாலைதீவில், பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ரகசியமாக சிசுவொன்றை பிரசவித்து, அந்த சிசுவை பையொன்றினுள் இட்டு, கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாலைதீவு பொலிஸாரால் மீட்டிருந்த சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த சிசு உயிரிழந்திருந்ததை உறுதிசெய்துள்ளனர்.

இந்தநிலையில், சந்தேகநபரான குறித்த பெண், இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, மாலைத்தீவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share this Article