மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிக்குமா!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்சாரம் சீராக கிடைகாமையால் நேயாளர் சிகிச்சை பாதிப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பாதிப்பு என தெரியவருகின்றது.

எதிர்பாராத இடர்நிலைகளில் பாவனைக்கென வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச்சங்கம் என்பன ஏதாவது முன் ஏற்பாடுகளை செய்துள்ளதா என்றால் அது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.

இதுவிடயமாக நெடுந்தீவு வைத்திய அதிகாரியிடம் வினவியபோது “ வைத்தியசாலையில் இருந்த மின்இயந்திரம் பழுதாகியுள்ளதாகவும் மாற்றீடாக இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.

இதேவேளை நெடுந்தீவில் எரிபொருள் மூலம் இயங்கும் மின்சார இயந்திரங்களே பாவனையில் இருப்பதால் சீரற்ற காலநிலை நிலவும் காலங்களில் எரிபொருள் விநியோகம் தடைப்படல், மின்கம்பங்கள் சேதமடைதல் மற்றும் இயந்திர கோளாறு போன்ற காரணங்களால் நெடுந்தீவில் மின் விநியோகம் அடிக்கடி இடைநிறுத்தல் மற்றும் சுழற்சிமுறை விநியோகம் என இடம்பெற்று வருகின்றமை தொடர்கின்றது.

எனவே இதனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

இதேவேளை ஏற்கெனவே ஒரு திட்டத்தின் கீழ் மருந்துகளை குளிரூட்டி வைப்பதற்கென சூரியசக்தி மூலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் பராமரிப்புகள் இன்றி அவை தற்போது அழிவடைந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சிமுறை மின்சார விநியோகத்தினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுகின்றமை நேற்று (மே10) இடம்பெற்ற சம்பவங்களூடாக வெளியாகியுள்ளது.

எனவே உரிய சுகாதார அதிகாரிகள் , வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நெடுந்தீவு வைத்தியசாலை நலன் புரிச் சங்கம் என்பன இந்நிலையினை கவனத்தில் எடுத்து இதற்கு ஒரு உடனடித் தீர்வினை கண்டு நேயாளர் நலன் போணுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என மக்கள் தங்களின் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும.

Share this Article