மாங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாங்குளத்தில் நேற்று (ஜனவரி 12) நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளை, வேம்பொடுகேணியைச் சேர்ந்த 26 வயதுடைய ரமேஷ்வரன் சாரங்கன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குளியாப்பட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி வந்த சிறிய ரக கப் வாகனம் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

கப் ரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உதவியாளர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article