மழை தொடர்கின்றது போக்குவரத்துக்கள் யாவும் நிறுதப்பட்டுள்ளன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புரவி புயல்காற்றினைத் தொடர்ந்து நெடுந்தீவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மழை வெள்ளமும் இன்னும் வடிந்தோடமுடியாதுள்ளது. மக்கள் தொடர்ந்தும் வெள்ளத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்றைய தினம் (நவம்பர் 05) தொடாச்சியான மழையுடன் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன ஏற்கனவே பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவா படகு இன்றைய தினம் போக்குவரத்திற்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த போதும் காலநிலயையையும் மக்கள் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


இதே நேரம் நெடுந்தீவில் மட்டுமன்றி யாழ் குடாநாடு பூராக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வீதிகள் கோயில்க்ள பொதுஇடங்கள் பல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலமையே காணப்படுகின்றது.

Share this Article