மல்லாவியில் இளைஞர் சுட்டுக்கொலை – அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு(ஜூலை 9) இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் என்ற 23 வயது இளைஞரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு பாலிநகர் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடத்திருந்த நிலையில், அதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this Article