மருத்துவ முகாம் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையினரின் ஒழுங்கமைப்பில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 09) நெடுந்தீவில் வைத்திய முகாம் நடாத்தப்பட்டது.
இம் மருத்துவ முகாமில் பொது வைத்திய நிபுணர் Dr.நிசாகன், பொது வைத்திய நிபுணர் Dr.ஜான்சன், இருதய வைத்திய நிபுணர் Dr.குருபரன், சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மதிவாணன், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி Dr.நந்தகுமார், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர், இயன் மருத்துவ பிரிவு உத்தியோகத்தர், ஊழியர்கள், வேலணை, ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி என பலர் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் இருதய வைத்திய நிபுணரால் இதய வருத்தமுள்ள நோயாளிகள் பார்வையிடப்பட்டு உடனடியாக Echo cardiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.
மேலும் நோயாளிகளுக்கு ECG, இரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
Share this Article