மருதமடு அன்னையின் வரவுக்காக விழாக்கோலம் கொள்ளும் நெடுந்தீவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) இடம்பெறவுள்ள நிலையில் நெடுந்தீவு பிரதேசம் விழாக்கோலம்.

திருப்பயண விழாவிற்கான முன்னாயத்த திருதின வழிபாடுகள் புனித யுவானியார்ஆலத்தில் இடம்பெறவுள்ள நிலையில் நேற்றையதினம (ஏப்ரல் 18) மாலை05:00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவில் உள்ள ஆலய பங்கு மக்கள் அன்னையை வரவேற்கும் வகையிலான வரவேற்பு  வளைவுகள் , பதாதைகள் , தோரணங்கள் போன்றவற்றை அமைக்கும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை மருதமடு அன்னை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் தரித்திருக்க ஏற்பாடாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article