மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கொடிதின நிகழ்வு ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு-மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம்”என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடிதின நிகழ்வானது நேற்று(மே 31) தொடக்கம் ஜுன் 14 ஆம் திகதி வரை மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இதில் கிடைக்கின்ற நிதியை வறிய பாடசாலை மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு உதவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் முதல் நாளான நேற்றையதினம் மன்னார் நகர பிரதேச செயலாளரினால் இந்தக் கொடிதின நிகழ்வானது தொடங்கிவைக்கப்பட்டது.

Share this Article