மன்னார் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்?

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரனை மன்னார் மாவட்டச் செயலாளராக நியமிப்பதற்கு இன்றைய அமைச்சரவையின் ஒப்புதலிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதங்கேணிப் பிரதேச செயலாளராக பணியாற்றி பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக அரச அதிபராகப் பணியாற்றிய க.கனகேஸ்வரன் நிர்வாகசேவையின் விசேட தரத்திற்கு தேர்வான நிலையில் நவம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேநேரம் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் வெற்றிடமாக காணப்படும் மன்னார் மாவட்ட அரச அதிபர் பதவிக்கு தற்போதைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரனை நியமிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவை யின் ஒப்புதலிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் கனகேஸ்வரன் மன்னார் மாவட்ட அரச அதிபராக நியமிக்கக்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article