மன்னாரில் மீட்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான பெருந்தொகைக் கஞ்சா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், இலுப்பைக்கடவையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 92 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்று இலங்கைக் கடற்படை தெரிவித்தது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 சாக்குப் பொதிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்று 42 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 92 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா என்று கூறப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article